புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய போக்குவரத்து வசதி, உணவு பொருட்கள், பொது சமையலறைகள் போன்ற உதவிகள் வழங்கப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் போடாமல் பழி போடும் மத்திய அரசு – ராகுல்காந்தி குற்றச்சாட்டு
சமூக செயல்பாட்டாளர்களான ஹர்ஷ் மந்தர், அஞ்சலி பரத்வாஜ் மற்றும் ஜகதீப் சோக்கர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகளான அசோக் பூஷன், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன், நேற்று (மே 13) விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது, “தலைநகர் பகுதியில் ‘ஆத்ம நிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ் அல்லது ஒன்றிய அரசு செயல்படுத்தி இருக்கும் திட்டத்தின் கீழ், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் அளிக்கப்பட வேண்டும். இம்மாதம் முதல் டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநில அரசுகள் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்.” என்று உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸின் செய்தி கூறியுள்ளது.
மேலும், உணவு பொருட்கள் வழங்க அடையாள அட்டைகளை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது எனவும், புலம்பெயர் தொழிலாளர்களின் சுயமுன்மொழிதலின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, ஒன்றிய அரசு போதிய முன்னெச்சரிக்கை மற்றும் அத்தியாவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே துறைக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.