Aran Sei

‘மக்களை வதைக்கும் உபா, தேசத்துரோக சட்டங்களை உச்சநீதிமன்றம் திரும்ப பெற வேண்டும்’ – ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன்

க்கள் சுதந்திரமாக சுவாசிக்கும் வகையில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)ச் சட்டம் (உபா), தேசத் துரோகச் சட்டங்களை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹிந்தன் நாரிமன் தெரிவித்துள்ளார்.

மறைந்த விஸ்வநாய் பசாயத்தின் 109வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டபோது அவர் இதனை பேசியுள்ளார்.

”இந்த வழக்குகளை மீண்டும் அரசாங்கத்திடம் அனுப்ப வேண்டாம் என்று நான் உச்சநீதிமன்றத்தை அறிவுறுத்துகிறேன். அரசாங்கங்கள் வரும் போகும், சட்டங்கள திருத்துவதும், ரத்து செய்வது அரசாங்கத்தின் வேலையல்ல. உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. மேலும், நீதிமன்றம் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 124ஏ மற்றும் உபா சட்டத்தின் கடுமையான பிரிவுகளை நீக்கினால் மக்கள் சுதந்திரமாக சுவாசிக்க முடியும். இதனால், சுதந்திர பத்திரிக்கையாளர் அமைப்பின் தரவரிசையில் (உலக ஊடக சுதந்திர தரவரிசை)  180 நாடுகளில் 142 வது இடத்தில் இருந்து முன்னேற வாய்ப்பிருக்கிறது” என நாரிமன் குறிப்பிட்டுள்ளார்.

லக்கிம்பூர் வன்முறை: குடியரசுத்தலைவரை சந்திக்க காங்கிரஸ் முடிவு

காலனி ஆதிக்க காலத்தில் இந்திய மக்களை ஒடுக்கக் கொண்டு வரப்பட்ட தேசத் துரோகச் சட்டம், தற்போது தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை இரண்டு ஊடகவியலாளருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, சுதந்திர ஊடக குறியீட்டில் பின்தங்கி இருப்பதற்கு, இத்தகைய ’காலாவதியான’ மற்றும் ‘அடக்குமுறை’ சட்டங்களும் காரணமாக இருக்கலாம் என நாரிமன் குறிப்பிட்டுள்ளார்.

லக்கிம்பூர் வன்முறை: ஆஷிஷ் மிஸ்ராவை 14  நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்படும்போது, அதில் தேசத்துரோக சட்டம் இல்லை என்று குறிப்பிட்ட நாரிமன், “தேசத்துரோக சட்டம் டிராப்டில் இருந்தது, இறுதி புத்தகத்தில் இல்லை. அது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் சேர்க்கப்பட்டது. தவறுதலாக இந்தச் சட்டம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது. சட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களும் தெளிவற்றதாக உள்ளன.” என்று அவர் கூறியுள்ளார்.

உபா சட்டதின் வரலாறுகுறித்து குறிப்பிட்ட அவர், “அப்போது சீனா மற்றும் பாகிஸ்தானுடன் போர்கள் நடைபெற்றது. இதனால் கடுமையான சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒடுக்குமுறை சட்டமான உபா சட்டத்தில் பிணை மறுக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் செயல்படுத்துதல்கள் கவனத்தில் கொல்லப்படுவதில்லை. தேசத் துரோக சட்டத்துடன் சேர்த்து இந்தச் சட்டத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், போராட்டத்தில் ஈடுபட்டக் கூடாது என எந்த சட்டத்திலும் இல்லை –உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர் கருத்து

”கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் போக்கு தற்போது நடைமுறையில் உள்ளது. மாற்று கருத்து வைப்பவர்கள், ஊடகவியலாளர்களை இந்தச் சட்டங்களின் கீழ் கைது செய்து நீண்ட நாட்கள் தண்டனை வழக்கும்போது, மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாது” என ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹிந்தன் நாரிமன் தெரிவித்துள்ளார்.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்