Aran Sei

கொரோனா காலத்தில் குழந்தைகளின் நலனை உறுதி செய்ய வேண்டும் – சிறார் நீதிக்குழு வேண்டுகோள்

கொரோனா இரண்டாம் அலையின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டுமென, உச்சநீதிமன்றத்தின் சிறார் நீதிக்குழுவும் , யூனிசெப் நிறுவனமும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உயர்நீதிமன்ற பிரதிநிதிகள் மற்றும் மத்திய, மாநில அரசின் பிரதிநிதிகளுடன் நடந்த கூட்டத்தில் பேசிய, சிறார் நீதிக்குழுவின் தலைவர் நீதிபதி எஸ்.ரவீந்திர பட், “அனாதை குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் அல்லது தங்கள் சொந்த வீடுகளிலேயே ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள் ஆகியோரின் நலத்தை பாதுகாக்க, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் குழந்தைகள் – என்ன செய்ய போகிறோம் நாம்?

மேலும், இதுபோன்ற குழந்தைகள், முன்னெப்போதையும் விட தற்போது அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாகவும் ரவீந்திர பட் கூறியுள்ளார்.

சிறார் நீதிக்குழு, மாநிலங்கள் , யூனியன் பிரதேசத்தை சேர்ந்த நீதிபதிகளை பிரதிநிதிகளாய் கொண்ட குழந்தைகள் நல அமைப்பாகும்.

 

புலம்பெயர் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் – மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது குறித்து பேசிய எஸ்.ரவீந்திர பட், விளிம்பு நிலையில் உள்ள குழந்தைகள், எளிதாக தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளதால், அவர்களை பாதுகாக்க தெளிவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, குழந்தைகள் நல செயல்பாட்டாளர்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகளை சார்ந்தவர்களை முன்களப்பணியாளர்கள் என்று அறிவித்து, தடுப்பூசி செலுத்தப்படவேண்டும் என்றும் எஸ்.ரவீந்திர பட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா காலத்தில் தேர்வுகள் குழந்தைகளின் மனநலத்தை பாதிக்கும் – பிரியங்கா காந்தி

“குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள போது அவர்களது பெற்றோர்களால் கவனித்து கொள்ள இயலாத சூழ்நிலையில், அவர்களை கவனித்துக்கொள்ள மாற்று ஏற்பாடு செய்யப்படவேண்டும்” என்று யுனிசெப் இந்தியா நிறுவனத்தின் குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர் வந்தனா காந்தாரி கூறியுள்ளார்.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்