கொரோனா பரவலை தடுக்க உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள 5 நகரங்களில் ஊரடங்கு விதித்து அலகாபாத் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உத்திரபிரதேச அரசின் மேல்முறையீட்டு மனுவில் இந்த உத்தரவு வழங்கபட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவ வசதி போதாமைகளை கருத்தில் கொண்டு லக்னோ, பிரயாக்ராஜ், வாரணாசி, கான்பூர் மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்களில் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதிவரை ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
மேலும், மத விழாக்கள், கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவை இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஊரடங்கை அமல்படுத்தினால், உத்திரபிரதேச மக்களின் உயிரையும், வாழ்வையும் பாதுகாக்க முடியாது எனக் கூறிய மாநில அரசு, உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட ஊரடங்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டில் ஊரடங்கு தடை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில், 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாகக் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.