Aran Sei

அனைத்து மாநிலங்களுக்கும் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க 12 பேர் கொண்ட நிபுணர் குழு – உச்சநீதிமன்றம் நியமித்தது

மாநிலங்களுக்கு சிறப்பாக மற்றும் வெளிப்படைத்தன்மையோடு ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க 12 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து 24 பக்க உத்தரவு ஒன்றையும் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு வெளியிட்டுள்ளதாக அந்த செய்தி கூறியுள்ளது.

மருத்துவத்திற்கான ஆக்சிஜனை ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்ய முடியாது – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தெரிவித்துள்ள சந்திரசூட்,  “வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில் கொரோனா அலை உச்சத்தை எட்டும் அதனால் மாநிலங்களுக்கான ஆக்சிஜன் தேவையும் மாறுபடும்.” என்று கூறியுள்ளதாகவும் தி இந்து  செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாநிலங்களுக்கு ஆக்சிஜனை பகிர்ந்தளிப்பது குறித்து 12 பேர் கொண்ட குழுவை நியமிப்பதாகவும் , இந்தியா முழுதும் உள்ள பல்கலைக்கழக, மருத்துவமனை சார்ந்த நிர்வாகிகள் ,மத்திய சுகாதாரத் துறை செயலாளர், கேபினட் செயலாளர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெறுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு தாரை வார்த்த மத்திய அரசு – தானாக முன்வந்து வழக்கு பதிந்த உயர்நீதிமன்றம்

இக்குழு ஆறு மாதங்களுக்கு செயல்படும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

அனைத்து மாநிலங்களின் ஆக்சிஜன் தேவையை 12 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக ஆக்சிஜன் பகிர்ந்து அளிக்கப்படும். தற்போதைய ஆக்சிஜன் இருப்பு, விநியோகம், எதிர்கால தேவை குறித்து நிபுணர் குழு பரிந்துரைகளை வழங்கும் எனவும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி கூறியுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்