Aran Sei

திகார் சிறையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் நிலை: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

திகார் சிறையின் உள் மற்றும் வெளிப்புறங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய  வேண்டுமென திகார் சிறை நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகள், கடந்த மார்ச் 14 அன்று திகார்
சிறைச்சாலையில் போதையில் மயக்கமுற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

விசாரணை கைதி சிறையில் மரணம் – சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

மேலும், இந்தச் சம்பவம்குறித்த சிசிடிவி காணொளிகள் எதுவும் இல்லை என திகார் சிறை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனால் எழுந்த சர்ச்சையை அடுத்து உச்சநீதிமன்றம் சிசிடிவி காணொளிகள் குறித்த தகவலைக் கேட்டு உத்தரவிட்டிருக்கிறது என தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம்குறித்து திகார் சிறைக்கண்காணிப்பாளர் “சிசிடிவி காணொளிகள் நான்கு நாட்கள் மட்டுமே சேமித்து வைக்கப்படும் ” என உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் அமர்வு முன் தெரிவித்திருந்தார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சிறையில் என் ஆன்மாவையல்ல; என் கால்களைதான் உடைக்க முடிந்தது’ – தலித் தொழிற்சங்க செயற்பாட்டாளர்  ஷிவ் குமார்

இந்நிலையில், திகார் சிறையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென திகார் சிறை நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.

திகார் சிறையிலும் குலையாத விவசாயிகளின் போராட்ட உறுதி – பத்திரிகையாளர் மன்தீப் புனியா

இந்தப் பிரமாண பத்திரத்தில் சிறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த எவ்வளவு நிதி ஒதுக்கப்பபட்டது. சிறையில் எங்கெல்லாம் பொருத்தப்பட்டுள்ளது, ஏன் சிசிடீவி காணொளிகள் 4 நாட்கள் மட்டுமே சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்