பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்று பட்டியல் சாதி சிறுவர்களை மலத்தை அகற்றுவதற்கு சில சாதி இந்து இளைஞர்கள் நிர்பந்தித்துள்ளதாக எவிடன்ஸ் எனும் அரசு சாரா நிறுவனம் கண்டறிந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களை, சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அந்த நிறுவனம், சிறுவர்களுக்கு மாநில அரசு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
விருந்தின் போது நண்பர்களின் தட்டில் சாப்பிட ஆசை – தலித் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்
இன்று, பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த எவிடன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கதிர், இந்தச் சம்பவம் டிசம்பர் 12-ம் தேதி நடைபெற்றதாகக் கூறியுள்ளார். “பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகுடல் கிராமத்துக்கு ஒரு உண்மை கண்டறியும் குழு சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுடனான விசாரணையில் ஈடுபட்டுள்ளது. மருவத்தூர் காவல் நிலையம் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஆர். அபினேஷ், என்.சிலம்பரசன் மற்றும் எஸ்.செல்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தலித் கொலை வழக்கு : விசாரிக்காத காவல் துறையினர் – உயர்நீதிமன்றம் நடவடிக்கை
சிறுவர்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அந்தச் சம்பவத்திற்கு பின் சிறுவர்கள் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர். பயிற்சி பெற்ற உளவியலாளர்களால் சிறுவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சாதி இந்து இளைஞர்கள் கூறிய கருத்தைக் கேட்ட பெற்றோர்களும் வருத்தப்பட்டதாக எவிடன்ஸ் இயக்கத்தின் நிர்வாக இயக்குனர் எவிடன்ஸ் கதிர் கூறியுள்ளார்.
தீப்பெட்டி தராததால் தலித் கொலை – வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது
டிசம்பர் 11 அன்று, பட்டியல் சாதி சிறுவர்கள், பொதுவெளியில் மலம் கழித்துள்ளார். அந்த இடத்தைச் சாதி இந்துக்கள் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆகையால், சிறுவர்கள் கழித்த மலத்தை சாக்கு பையில் அள்ளக் கோரி சாதி இந்துக்கள் நிர்பந்தித்துள்ளனர். அப்போது, இழிவான சொற்களைப் பயன்படுத்தி அவர்களை இழுவுபடுத்தியுள்ளனர். அதனை செய்யாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.