Aran Sei

பத்திரிகையாளர் சித்திக் காப்பான் மருத்துவ அறிக்கை – உத்தரபிரதேச அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

ட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் காப்பானுடைய தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று, ஹத்ராஸ் நகரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண் ஆதிக்க சாதியினரால் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சித்திக் காப்பானை அம்மாநிலஅரசு உபா சட்டத்தின் கீழ் கைது செய்தது.

மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஏப்ரல் 20 அன்று குளியல் அறையில் வழுக்கி விழுந்துள்ளார்.  அவரை மதுராவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

சித்திக் காப்பான் மரணமடைய நேரிடும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள சித்திக்கின் மனைவி

அதையெடுத்து, அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரைக் காவல்துறை சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிப்பதில்லை என்றும், கையில் விலங்கிடப்பட்ட நிலையில் அவர் பாட்டிலிலேயே சிறுநீர் கழித்து வருவதாக அவரது மனைவி ரைஹானா காப்பான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 27) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணன், நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்விற்கு முன் வழக்கு  விசாரணைக்கு வந்துள்ளது.

சிறுநீர் கழிக்கக்கூட உரிமை மறுக்கப்படும் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் – கைவிலங்கிடப்பட்டு கொரோனா சிகிச்சையளிக்கப்படும் அவலம்

உத்தரபிரதேச அரசு சார்பாக ஆஜரான துஷர் மெஹ்தா, சித்திக் காப்பான் கைவிலங்கிடப்பட்டு  பாட்டிலில் சிறுநீர் கழிக்க நிர்பந்திக்கப்படுகிறார் என்று மனுதாரரான கேரள உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் முன் வைத்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இதனையடுத்து, சித்திக் காப்பானுடைய தற்போதைய உடல்நிலை குறித்து நாளை (ஏப்ரல் 28) மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும், நாளை வழக்கு விசாரணை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்