Aran Sei

அலோபதி குறித்து அவதூறு பேசியதாக வழக்கு – வாட்ஸ் ஆப்பில் வந்த செய்தியைக் கூறியதாக நீதிமன்றத்தில் பின்வாங்கிய பாபா ராம்தேவ்

ல்லோபதி மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாபா ராம்தேவ் பேசியதன் ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாபா ராம்தேவ் நவீன அல்லோபதி மருந்துகள் கொரோனா தொற்றைக் குணப்படுத்தவில்லை,10,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டதற்கு பின்னரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று போலியான தகவல்களைச் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

அலோபதி குறித்த பாபா ராம்தேவ்வின் கருத்து : சட்ட ஒழுங்கு மீறளென உத்தரகண்ட் காவல்துறையிடம் இந்திய மருத்துவ சங்கம் புகார்

இதனைத்தொடர்ந்து, பாபா ராம்தேவின் இந்தக் கருத்துக்கு எதிராக, நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இந்திய மருத்துவ சங்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், இந்தப் புகார்களின் அடிப்படையில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் கீழ் தன் மீது நடவடிக்கை எடுக்கத் தடைவிதிக்க வேண்டும் எனக்கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி .ரமணா இவ்வாறு கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘டாக்டர்கள் இறைதூதர்கள், கடவுளின் வரப்பிரசாதம்; அவசர சிகிச்சை அலோபதிதான் சிறந்தது’ – பாபா ராம்தேவ்

மேலும், “அவர் சொன்ன உண்மையான விஷயம் என்ன? நீங்கள் முழுமையாக எதையும் சமர்ப்பிக்கவில்லை” என்று நீதிபதி என்.வி .ரமணா கேள்வியெழுப்பியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பாபா ராம்தேவ் தாக்கல் செய்த மனுவில், ராய்ப்பூர் மற்றும் ராய்ப்பூரில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை டெல்லிக்கு மாற்ற வேண்டியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலோபதி குறித்து தவறான கருத்திட்டதாக மருத்துவர்கள் புகார் – பாபா ராம்தேவ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பாபா ராம்தேவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோஹன்டகி, பாபா ராம்தேவின் சர்ச்சைக்குரிய கருத்துகுறித்து நீதிமன்றத்தில் கூறும்போது, “அந்தக் கூட்டத்தில் பாபா ராம்தேவ் தனக்கு வாட்ஸாப்பில் வந்த செய்தியைத்தான் கூறினார். மேலும், மருத்துவர்களுக்கோ, மருத்துவத்திற்கோ எதிராக அவர் எதுவும் பேசவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்   செய்தி கூறுகிறது.

 

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்