Aran Sei

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கை விசாரிக்க கோரி மனு – விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்

சிறுமி கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த தந்தை தாக்கல் செய்ய ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார். நள்ளிரவில் அவரது உடலை காவல்துறையினர் அடக்கம் செய்தனர், இறுதி சடங்குகள் நடத்தக் கூட எங்களை (பெற்றோர்களை) அனுமதிக்க வில்லைஎன்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம்: சைவ பிரியாணி விற்ற இஸ்லாமியரை தாக்கிய இந்துத்துவாவினர் – இஸ்லாமிய வெறுப்பே காரணமென பத்திரிகையாளர் கருத்து

மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி அடங்கிய அமர்வு,மனுதாரரை உத்திரபிரதேச உயர்நீதிமன்றத்தை நாடுமாறு கூறியுள்ளது.

நான் ஒரு தொழிலாளி, நான் அமைப்பிற்கு பலியாகி இருக்கிறேன். உத்திரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுள்ளது.” என மனுதாரரின் தரப்பில் வாதிட்டப்பட்டது.

இதனை ஏற்க மனுத்த தலைமை நீதிபதி ரமணா, “இந்த நீதிமன்றத்தை இது போன்ற மனுக்களால் நிரப்ப வேண்டாம், ஏன் நேரடியாக உச்சநீதிமன்ற வர வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

‘மசூதி ஒலிபெருக்கிகளால் 75 ஆண்டுகளாக இல்லாத பிரச்சனை இப்போது மட்டும் ஏன்?’ – எச்.டி.குமாரசாமி கேள்வி

நான் பாதிக்கப்பட்ட தந்தை, இது ஒரு விசித்திரமான சூழ்நிலை. நான் புலந்த்ஷாஹர் பகுதியைச் சேர்ந்தவன். எனக்கு உச்சநீதிமன்றத்தை விட உயர்நீதிமன்றம் தொலைவில் உள்ளதுஎன சிறுமியின் தந்தை நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

நாங்கள் உயர்நீதிமன்றத்தை அணுக அனுமதியளிக்கிறோம்.  அனைத்து ரிட் மனுக்களையும் எங்களால் ஏற்க முடியாது. மனுவை வாபஸ் பெற்று, உயர்நீதிமன்றத்தை அணுகுங்கள்என தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறியுள்ளார்.

Source: Live Law

ராமராஜ்ஜியம் குறித்து மருத்துவர், அரசியல் விமர்சகர் காந்தராஜ் நேர்காணல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்