Aran Sei

நோட்டாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தால் தேர்தலை ரத்துசெய்ய வேண்டும்- உச்சநீதிமன்றத்தில் மனு

தேர்தலின்போது நோட்டாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தால் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் , அந்தத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை மறுதேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்றும் உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதி மன்ற வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாயா இந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற பிரார்த்தனை – திண்டுக்கல் கோவிலில் வீரப்பனின் மனைவி பூஜை

அந்த மனுவில் ஒரு தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களைவிட நோட்டா அதிக வாக்குகள் பெற்றால், அந்தத் தேர்தலின் முடிவுகளை நிறுத்தி வைத்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நோட்டாவை விடக் குறைவான வாக்குகள் பெற்ற வேட்பாளர்களை மறுதேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக லைவ் லா செய்தி கூறுகிறது.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சிவசேனா முடிவு

இந்த மனுமீதான விசாரணையின்போது உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே , வேட்பாளர்கள் நோட்டாவை விடக் குறைவான வாக்குகள் பெற்று நிராகரிக்கப்பெற்றால் யார் அந்தப் பகுதியின் பிரதிநிதியாக இருப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்த மனுதாரரின் வழக்கறிஞர் மேனகா , மக்களுக்கு வேட்பாளர்களை நிராகரிக்க உரிமை உள்ளது எனவும் ,இந்த முடிவினால் அரசியல் கட்சிகள் நல்ல வேட்பாளர்களைக் களமிறக்குவார்கள் “என்றும் தெரிவித்துள்ளதாக லைவ் லா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் – விவசாயிகள் போராட்டக் குழு முடிவு

இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ” நீங்கள் சொல்வது கடினமாக இருந்தாலும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கின்றது.

இந்நிலையில் இதுகுறித்து பதிலளிக்க உச்சநீதிமன்றம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்