Aran Sei

ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத 3 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து- மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தார் அட்டையோடு இணைக்கப்படாத 3 கோடி ரேஷன் அட்டைகளை ரத்துசெய்யபடவிருக்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுமீதான விசாரணையின்போது இவ்வாறு தெரிவித்துள்ளது.

ரேஷன் பொருட்கள் கிடைக்காத ஏழைகள் : அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு

கடந்த செப்டம்பர் 28,2018 அன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேவி என்பவரின் 11 வயது சிறுமி சந்தோஷி பசிக்கொடுமையால் உயிரிழந்தார்.

இந்த மனுவில் , சந்தோஷியின் இறப்புக்கு காரணம் பட்டினி கொடுமையே எனவும்,  ஆதார் அட்டையோடு ரேஷன் அட்டை இணைக்கப்படவில்லை என்று கூறி அதிகாரிகள் 2017 ஆம் ஆண்டு அவர்களது ரேஷன் அட்டையை ரத்து செய்தனர் என்று குறிப்பிடபட்டுள்ளது.

இந்தியாவில் உணவுச் சந்தையை பிடிக்கத் துடிக்கும் மேற்கத்திய கார்ப்பரேட்டுகள் – உத்சா பட்நாயக்

சந்தோஷியின் சகோதரி குடியாதேவி இந்த மனுவின் துணை மனுதாரர் ஆவார்.

இந்த மனுவின் மீதான விசாரணையின் மீது, 3 கோடி ரேஷன் அட்டைகள் நீக்கப்படவிருப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேலும் ,3 கோடி ரேஷன் அட்டைகள் நீக்கப்படவிருப்பது வெறும் செய்தியல்ல மிக முக்கிய பிரச்சனையாகக் கருத வேண்டும் எனவும் உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

எங்களுக்கு நிரந்தர வீடு வேண்டும் – சாலையோர மக்கள் அரசிடம் மனு

இந்நிலையில், 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

SOURCE: THE INDIAN EXPRESS 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்