Aran Sei

உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உதவுங்கள் – ஒன்றிய அரசை கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்றம்

credits : the indian express

க்ரைன் – ருமேனிய எல்லைக்கு அருகே சிக்கித் தவிக்கும் இந்திய மருத்துவ மாணவர்களை மீட்க உதவ அரசுத் தரப்பு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

ருமேனியா நாட்டு எல்லையில் கடும் குளிரில் மாணவர்கள் சிக்கித் தவிப்பதாகவும், ருமேனியாவில் இருந்து விமானங்களை அரசு இயக்கவில்லையெனவும் வழக்கறிஞர் ஒருவர் இன்று (மார்ச் 3) முன்வைத்த வாதத்தை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு கவனத்தில் கொண்டுள்ளது.

உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர் மரணம் – கர்நாடகாவில் நீட் தேர்வுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு

“போலந்து மற்றும் ஹங்கேரியா நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. ருமேனியாவில் இருந்து இயக்கப்படவில்லை. சிறுமிகள் உட்பட பல இந்திய மாணவர்கள் எந்த வசதியும் இல்லாமல் அங்கு சிக்கித் தவிக்கின்றனர்” என்று அவ்வழக்கறிஞர் கூறியுள்ளார்.

“அம்மாணவர்கள்மீது எங்களுக்கும் அனுதாபம் உள்ளது. ஆனால் நீதிமன்றத்தால் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ள அமர்வு, சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கு உதவுவது குறித்து பரிசீலிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

Source: PTI

தொடர்புடைய பதிவுகள்:

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்