Aran Sei

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு

credits : the new indian express

க்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துத் தீர்ப்பளித்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தியைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் இந்த விவாகரம் குறித்து அறிந்த இரண்டு அரசு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், தமிழகத்தை சேர்ந்த 3 சுற்றுச்சூழல் நிபுணர்களைக் குழுவுக்குப் பரிந்துரைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களிலிருந்து 2 பேரைக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கலாம். அவர்கள் 48 மணி நேரத்தில் தேந்தெடுக்காவிட்டால், தமிழக அரசு அவர்களைத் தேந்தெடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியளிக்கலாம் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மருத்துவத் தேவைக்கான ஆக்சிஜனை மட்டுமே ஸ்டெர்லைட் நிர்வாகம் உற்பத்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். அதனைத் தேவையான மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து அளிக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

`ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி இல்லை’ – உச்ச நீதிமன்றம்

உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், “இது, தேசம் ஒன்றாக இணைந்திருக்க வேண்டிய தருணம். தற்போது தமிழகத்திற்கு போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளது. எதிர்காலத்தில் அவர்களுக்குத் தேவை ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம்.”  என  தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பு குழுவில் போராட்டர்காரர்கள் அல்லது உள்ளூர் மக்கள் இருந்தால் தேவை பிரச்னைகள்  உருவாகும் என்பதால், அவர்கள் இடம்பெறக் கூடாது என மத்திய அரசு மற்றும் வேதாந்தா சார்பில் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்ற நீதிபதிகள், உள்ளூர் மக்களின் கருத்துக்களை ஏற்கலாம், குழுவில் இடம்பெறச் செய்யக் கூடாது என தெரிவித்தனர்.

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்