நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் மகேஸ்வரி நில பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், மூன்றாவது நீதிபதியான சஞ்சீவ் கண்ணா, மத்திய விஸ்டா திட்டத்திற்கான நில பயன்பாட்டு மாற்றம், சட்டத்துக்குப் புறம்பானது என்று கூறியுள்ளார்.
கொரோனா காலத்தில் நாடாளுமன்ற கட்டிடம் தேவையா? – முன்னாள் அரசு அதிகாரிகள் கேள்வி
ஆரம்ப கட்டத்தில் ஒப்புதல் தேவையில்லை என்றும் திட்டம் செயல்படுத்தப்படும் பொது ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் இரணடு நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி சஞ்சீவ் கண்ணா, புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்துக்கு அனுமதி வழங்கினாலும், நிலத்தை வேறுபயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி அளித்த விவகாரத்தில் முரண்பட்டு தீர்ப்பளித்துள்ளார். பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் குழுவில் அனுமதி முழுமையாகப் பெறவில்லை என்பதையும், மக்களின் பங்களிப்பு இல்லை என்பதையும் அவர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணியைத் தொடங்க கூடாது – உச்ச நீதிமன்றம்
மத்திய அரசின் விஸ்டா திட்டத்துக்கு எதிராகப் பல்வேறு கேள்விகளை எழுப்பி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. டெல்லியில் மிகப்பெரிய அளவில் கட்டப்படும் கட்டிடத்துக்கு எவ்வாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 7-ம் தேதி இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், “புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் பூமி பூஜையைக் கடந்த 10-ம் தேதி நடத்தலாம் ஆனால், மனுக்கள் மீது தீர்வு எட்டப்படும்வரை கட்டுமானங்கள் இடிக்கப்படக் கூடாது. புதிதாகக் கட்டுமானம் கட்டப்படக் கூடாது. மரங்கள் எதையும் வெட்டக் கூடாது” என உத்தரவிட்டிருந்தனர்.
இதையடுத்து, புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா கடந்த 2020-ம் ஆண்டு, டிசம்பர் 10-ம் தேதி டெல்லியில் நடந்தது, பிரதமர் மோடி பங்கேற்று புதிய நாடாளுமன்றம் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.