Aran Sei

‘ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக்குக’ – சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதி மன்றம்

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி சமர்பித்த மனுவை மார்ச் 9ஆம் தேதி அன்று விசாரிக்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வாதாடியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இந்த மனு கடந்த பல மாதங்களாக விசாரணைக்கு வரவில்லை என்றும் அதே நேரம் விசாரணைக்கான வழக்கு பட்டியலில் இருந்து இம்மனு நீக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, “நாங்கள் மார்ச் 9ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம்” என்று அமர்வு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி, தனது மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டிருந்ததை சுப்பிரமணியன் சுவாமி நினைவூட்டியுள்ளார்.

பசுவை பாதுகாப்பவர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள் – உ.பி. மக்களுக்கு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்

முன்னதாக, 2020ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று, சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை மூன்று மாதங்களுக்குப் பிறகு பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

ராமர் பாலம் இருப்பதை ஒன்றிய அரசு ஏற்கனவே ஏற்றுக்கொண்டது என்றும் இது இவ்வழக்கின் முதற்கட்ட வெற்றி என்றும் தான் சமர்பித்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை பரிசீலிக்க சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் 2017ஆம் ஆண்டு ஒரு கூட்டத்தை அழைத்ததாகவும், ஆனால் அதன்பிறகு இவ்விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

காஷ்மீர் பிரச்சினையை பேசி தீர்க்கலாம் – பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சேதுசமுத்திரம் கால்வாய் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணிய சுவாமி, “ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்