2022 ஜனவரி 12 அன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வெளியிட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்களில் 3 மாதங்களுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்களை வேலைக்கு அமர்த்த முடியாது என்றும், குழந்தை பிறந்து 4 மாதங்களுக்குள் பெண்கள் வேலைக்குச் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய விதிமுறைகள் மாற்றுத்திறனாளிகள் வேலைக்குச் சேருவதில் பாகுபாடு காட்டப்படுவதாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.
முன்பு 6 மாதங்கள் வரை கர்ப்பமான பெண்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைக்குச் சேரலாம் என்ற விதிமுறை இருந்தது.
2009 அக்டோபரில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைக்கு ஆள் எடுப்பதற்கும், பதவி உயர்வுக்கும் கர்ப்பத்தைத் தடையாகக் கருதக்கூடாது என்று தனது 30 ஆண்டுக்கால விதிமுறைகளைத் திருத்தியிருந்தது.
“ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இந்த புதிய நடைமுறை பெண்களுக்கு எதிரானது, பாரபட்சமானது என்று அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜக்மதி சங்வான் தெரிவித்துள்ளார்.
இது அரசியலமைப்பு விதிகளை மீறுவதாக உள்ளது. இந்தப் பெண்களுக்கு எதிரான வழிகாட்டுதல்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் அவர்கள் கோரியுள்ளனர்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இந்த புதிய வழிகாட்டுதல்களை மாற்ற வேண்டும் என்றும், பெண் ஊழியர்கள் பிரசவத்திற்குப் பிறகு 4 மாதங்களுக்குள் பணியில் சேர வேண்டும் என்ற புதிய திருத்தம் வங்கியில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு இருக்கும் 6 மாத மகப்பேறு கால விடுப்புக்கு எதிரானது என்றும் கேரளாவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஊழியர்கள் சங்கம், திருவனந்தபுரத்தில் உள்ள அதன் வங்கி தலைமையகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
Source : nationalheraldindia
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.