Aran Sei

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுங்கள் அல்லது பதவி விலகுங்கள் –  பிரதமர் மோடிக்கு சீதாராம் யெச்சூரி கண்டனம்

credits : the newindian express

கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடுங்கள் அல்லது பதவி விலகிடுங்கள் என பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள தொடர் ட்விட்டர் பதிவுகளில், “மோடியும் அவரது அரசாங்கமும் பேரழிவை உருவாக்கியதிலிருந்து தப்ப முடியாது. கொரோனா பரவலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கடைபிடிக்காத மக்கள் தான் காரணம் என்றீர்கள், பிறகு மாநில அரசுகள்மீது பழி போட்டீர்கள். தற்போது, உருமாற்றம் பெற்ற புதிய வைரஸ் என்று குறை கூறுகிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.

அடுத்த ட்விட்டர் பதிவில், ”அனைத்து வைரஸ்களும் உருமாற்றம் பெறும், அதற்கு உகந்த சூழ்நிலை அமைந்தால் உயிரிழப்புகள் கூட ஏற்படும். லட்சக்கணக்கானோர் ஒரிடத்தில் கூட அனுமதித்ததன் மூலம், அறிவியல் புறக்கணித்ததன் மூலம், தெளிவற்ற தன்மையை ஊக்குவித்தன் மூலம் மோடி அந்தச் சூழ்நிலையை உருவாக்கினார். பின்னர் ஒரு வருடம் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இருந்துவிட்டு, சுயவாழ்த்துகளில் சுழன்று வருகிறார்.” என குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள் ஆகியவற்றை வழங்கி மக்கள் உயிர்கள் காப்பாற்றுங்கள்” என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், அந்தப் பதிவில் உலகளாவிய தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுங்கள் அல்லது பதவி விலகுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்