Aran Sei

தொடர்ந்து திட்டமிட்டே சாவர்க்கரை அவமதித்து வரும் ராகுல்காந்தி மீது புகார் அளிக்க போகிறேன் – சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர்

தொடர்ந்து திட்டமிட்டே சாவர்க்கரை அவமதிப்பதாக கூறி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்போவதாக மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் கூறியுள்ளார்.

பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது ராகுல் காந்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

அந்தமான் சிறையிலிருந்த சாவர்க்கர் ஒரு பறவையின் மீதேறி இந்தியாவுக்கு வந்து போனார் – கர்நாடகாவின் 8-ம் வகுப்பு பாடப்புத்தக தகவலால் சர்ச்சை

இந்நிலையில் கடந்த நவம்பர் 15 அன்று ஹிங்கோலியில் பழங்குடியின மக்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “அந்தமான் சிறையில் இருக்கும் போது சாவர்க்கார் ஒரு கடிதம் எழுதினார். அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எழுதிய மன்னிப்பு கடிதம். அந்த கடிதத்தில் அவர் தன்னை விடுவிக்குமாறு மன்றாடியிருந்தார். இதேபோல் சாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் ஓய்வூதியம் பெற்றார். சிறையிலிருந்து வந்த பின்னர் அவர் ஆங்கிலேயப் படைகளில் சேர்ந்தார். சாவர்க்கருக்கும் , பிர்ஸா முண்டாவிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?

இந்நிலையில், தொடர்ந்து திட்டமிட்டே சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரை அவமதிப்பதாக கூறி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்போவதாக மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தொடர்ந்து என் தாத்தாவை அவமதித்து பேசி வருகிறார். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி வீர் சாவர்க்கரை அவமதித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

Source : the print

நெத்தியில நாமம் போட்டா நல்லவரா? | பிரதீப்பை கோமாளியாக்கிய நெட்டிசன்கள் | Aransei Roast | Love Today

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்