Aran Sei

சாவர்க்கரை அவமதித்த விவகாரம் – எனது நடைப்பயணத்தை முடிந்தால் தடுத்து பாருங்கள் என் மகாராஷ்டிர அரசுக்கு ராகுல்காந்தி சவால்

சாவர்க்கர் பற்றி பரபரப்பு குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, முடிந்தால் தனது நடைப்பயணத்தைத் தடுத்து பாருங்கள் என்று மகாராஷ்டிர அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் அவரது நடைப்பயணம் நடைபெற்று வரும் நிலையில் அவர் நேற்று முன்தினம் வாஷிம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, சாவர்க்கரை பற்றி கடுமையாக தாக்கி பேசினார்.

தொடர்ந்து திட்டமிட்டே சாவர்க்கரை அவமதித்து வரும் ராகுல்காந்தி மீது புகார் அளிக்க போகிறேன் – சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர்

அப்போது அவர், “சாவர்க்கர் பாஜக மற்றும் ஆர்ஆர்எஸ் அமைப்பின் அடையாளம். அவர் அந்தமான் சிறையில் 2 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதங்கள் எழுதத் தொடங்கினார். சாவர்க்கர் தன்னைப்பற்றி வேறு ஒருவரின் பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் தான் வீரமிக்கவர் என கூறியுள்ளார். அவர் ஆங்கிலேய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெற்று வந்தார். அவர்களுக்காக வேலை செய்தார். காங்கிரசுக்கு எதிராக வேலை பார்த்தார்” என்று பேசியுள்ளார்.

சாவர்க்கர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்ற நிலையில் ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. சாவர்க்கரை அவமதித்த ராகுல்காந்தியின் நடைப்பயணம் மகாராஷ்டிராவில் நிறுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் செவாலே அரசை வலியுறுத்தினார்.

இந்த நிலையில் நேற்று ராகுல்காந்தியின் நடைப்பயணம் 71-வது நாளாக நடந்தது. மகாராஷ்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தில் அவர் நடைப்பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது அவருடன் நடிகை ரியாசென் பங்கேற்றார்.

நடைப்பயணத்துக்கு மத்தியில் ராகுல்காந்தி நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது சாவர்க்கர் மீது அவர் மீண்டும் தனது குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் சாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதத்தை நிருபர்களிடம் ராகுல்காந்தி காண்பித்தார்.

விவசாயிகளின் முதுகெலும்பையும் ஒன்றிய அரசு உடைத்து விட்டது – ராகுல்காந்தி

“உங்களுக்கு மிகவும் கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரனாக இருக்க நான் கெஞ்சுகிறேன்” என்று கடைசி வரியில் சாவர்க்கர் குறிப்பிட்டு இருப்பதை ராகுல்காந்தி படித்துக் காட்டினார்.

நான் சாவர்க்கரை பற்றி கூறிய கருத்துக்களை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளேன். பயம் காரணமாக தான் சாவர்க்கர் கருணை கடிதத்தை எழுதினார். மேலும் அவர் ஆங்கிலேய அரசுக்கு உதவியது தெளிவாகிறது. இது மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேரு போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அவர் செய்த துரோகம். சிலர் எனது நடைப்பயணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். வேண்டுமென்றால் எனது நடைப்பயணத்தை மகாராஷ்டிர அரசு நிறுத்தி பார்க்கட்டும் என்று ராகுல்காந்தி சவால் விடுத்துள்ளார்.

Source : NDTV

நன்றி மறந்தாரா நளினி ? Nalini Release | Rajiv Gandhi Case | Perarivaalan | Vaiko | Deva’s Update 58

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்