Aran Sei

சவுதி பத்திரிக்கையாளரை கொலை செய்ய சவுதி  இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார் – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

மெரிக்க உளவுத்துறையின் அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியை கைது அல்லது கொலை செய்யும் நடவடிக்கைக்குச் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் அளித்திருப்பதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க – சவுதி உறவில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கை அமைந்திருக்கிறது.

சவுதி அரசின் கொள்கைகளை விமர்சித்து வாஷிங்டன் போஸ்டில் எழுதிவந்த, கஷோகியை, இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய தூதகரத்திற்கு தொடர்புடையவர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலையில் இளவரசருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அந்நாட்டு அரசு மறுத்து வந்தது.

இந்திய வலதுசாரி ஊடக வெளியின் தோற்றமும் தனிச்சிறப்புகளும் – பகுதி 3

”துருக்கி இஸ்தான்புலில், சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியை கைது அல்லது கொலை செய்யும் நடவடிக்கைக்குச் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் அளித்துள்ளதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்” என அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநரின் அமெரிக்க அலுவலகம், தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

”வெளிநாட்டில் உள்ள கஷோகி உள்ளிட்ட அதிருப்தியாளர்களை அமைதியாக்குவதற்கான நடவடிக்கையைகளில் இளவரசரின் முதன்மை ஆலோசகர், முகமது பின் சல்மானின் பாதுகாப்பு குழு உறுப்பினர்களின் நேரடி தொடர்பு மற்றும் அதற்கு இளவரசரின் ஆதரவை அடிப்படையாக கொண்டு நாங்கள் இதை மதிப்பிட்டுள்ளோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் போர் உள்ளிட்ட பிரச்னைகளில் சவுதி அரசாங்கத்தின் மனித உரிமை செயல்பாடுகளைக் கேள்வி எழுப்பும் விதமாகவும், இந்த அறிக்கையை  வெளியிடக் கூடாது என அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் 2019 ஆம் ஆண்டு இயற்றிய சட்டத்தையும் மீறி, இந்த அறிக்கையை ஜோ பைடனின் அரசு வெளியிட்டுள்ளது.

டிராக்டர் பேரணியில் உயிரிழந்தவரின் எக்ஸ்ரே படத்தை தர முடியாது – நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

தேசிய புலனாய்வு அமைப்பின் அமெரிக்க அலுவலகம் தயாரித்துள்ள இந்த அறிக்கை,  2018 ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்கா நாடாளுமன்றத்தில், அப்போதை அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த அறிக்கையின் கருத்துக்களை எதிரொலிக்கிறது.

அமெரிக்காவின் விர்ஜீனியாவில், சுய நாடுகடத்தலில் இருந்த 59 வயதான ஜமால் கஷோகி, வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளில், எம்பிஎஸ் என்று அறியப்படும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் மோசமான முடிவுகளை விமர்சித்து எழுதி வந்தார்.

துருக்கி நாட்டை சேர்ந்த காதலியை மணப்பதற்கான ஆவணங்களை வழங்குவற்காக  அக்டோபர் 2, 2018 ஆம் தேதி கஷோகி, இஸ்தான்புலில் உள்ள சவுதி தூதரகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை இளவரசருக்குத் தொடர்புடைய குழுவினர் கொலை செய்து உடலை அப்புறப்படுத்தியுள்ளனர். அவர் தொடர்பான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

தாண்டவ் வெப் சீரிஸ் விவகாரம்: இந்து மதத்தை இழிவு செய்வதா? – நீதிபதி கடும் கண்டனம்

கஷோகி காணாமல் போனது தொடர்பாக முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துவந்த சவுதி, பின்னர் அவரை ஒரு மூர்கமான படை தவறுதலாக கொன்றதாக ஒப்புக்கொண்டது.

இது தொடர்பாக எம்பிஎஸின் மூத்த உதவியாளர் சல்மான் அல்-கஹ்தானி, புலனாய்வு துணைத் தலைவர் அஹ்மது அசிரி உள்ளிட்ட 5 மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேரை சவுதி அரசு பணிநீக்கம் செய்தது.

2019 ஆம் ஆண்டு தொடங்கபட்ட விசாரணையில், 11 பேர்  விசாரிக்கப்பட்டு, 3 பேருக்குச் சிறை தண்டனையும், 5 பேருக்குத் தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. கஷோகி குடும்பத்தினரால் மன்னிக்கப்பட்டதை அடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் 20 ஆண்டு சிறை தண்டனையாக அது குறைக்கப்பட்டது.

Source: Reuters

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்