சவுதி அரேபியாவின் பெண் உரிமை செயல்பாட்டாளரான, லூஜெய்ன் அல் ஹத்லை அந்நாட்டு அரசு விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளனர்.
லூஜெய்ன் விடுதலை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், மூன்று ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக லூஜெய்ன் சிறையில் அடைப்பட்டிருந்த நிலையில், சர்வதேச அழுத்தம் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு இருந்த தடையை நீக்கக் குரல் கொடுத்து வந்த லூஜெய்னுக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தீவிரவாத தடுப்பு சட்டத்தில் கீழ் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கிளர்ச்சி செய்தல், வெளிநாட்டு திட்டங்களைச் செயல்படுத்துதல், அரசியல் உள் நோக்கத்துடன் உரிமை குழுக்களை நடத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைக்கைதியாகவும், தனிமைச்சிறைக் கைதியாகவும் 1001 நாட்கள் லூஜெய்ன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஜனநாயக மற்றும் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சவுதி அரேபியாவுடனான உறவை மறு பரிசீலனை செய்வோம் என அமெரிக்காவில் புதிதாக பதவியேற்ற அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில், சவுதி அரேபியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
“பயிற்சி இடைவேளையின் போது தொழுகை நடத்தியது குற்றமா?” – கிரிக்கெட் பயிற்சியாளர் வசீம் ஜாஃபர்
31 வயதான லூஜெய்ன், சிறையில் இருக்கும் போதும் அங்கு கைதிகளுக்கு நடக்கும் அநீதிகள் தொடர்பாக குரல் கொடுத்து வந்தார்.
லூஜெய்ன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும், 5 ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Source : AP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.