Aran Sei

சாத்தான்குளம் காவல் நிலைய மரண வழக்கு – குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு பிணை மறுத்த நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் பகுதியில்  தந்தை, மகன் காவல் நிலைய மரணித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு பிணை மறுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு நடைபெற்று வரும் நிலையில் பிணை வழங்க இயலாது என்று பிணை வழங்க மறுத்துள்ளனர்.

கடந்த ஜூன் 18 அன்று, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவர் நான்கு காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள், சில தினங்களுக்குப் பின்னர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து  நடந்த ஆய்விற்கு பிறகு காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாலேயே  இறந்தனர் என்பது தெரியவந்தது.

Source: BAR BENCH   

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்