Aran Sei

சசிகலா வருகை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது – முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

சிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன் இணைய 100 விழுக்காடு வாய்ப்பு  இல்லை என்றும் ஜெயல‌லிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் ச‌சிகலா என்றும் தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இம்மாத இறுதியில் விடுதலையாகி வருகிறார். விடுதலைக்குப் பின் அவரை அதிமுக கட்சியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் சசிகலா கட்சியில் இல்லை என்றும், அவரின் விடுதலை கட்சிக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தினகரனின் அமமுக கட்சியில் இருந்த பல உறுப்பினர்கள் ஏற்கனவே அதிமுகவில் இணைந்து உள்ளனர் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

“தேர்தல் வெற்றிக்காக அணு ஆயுத நாடுகளை போரின் விளிம்பிற்குத் தள்ளினார் மோடி” – இம்ரான் கான் குற்றச்சாட்டு

டெல்லிக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்டிருக்கும் நினைவகத்தைத் திறக்க அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் தேர்தல் கூட்டணி குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், சசிகலாவின் மறு வருகை குறித்து பிரதமரிடம் பேசுவார் என்றும் எதிர்பார்த்த நிலையில், சசிகலாவின் வருகை குறித்து எதுவும் பேசவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள் அன்று சேலத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்கியது சசிகலா என்றும் சசிகலாவின் வருகை அதிமுக கட்சியில் சிக்கலை உருவாக்கும்” என்றும் தெரிவித்திருந்தார்.

பேரறிவாளனை மன்னித்து இந்தக் கொடூரமான விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் – பாடகர் டி.எம்.கிருஷ்ணா

முன்னர், துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி திமுகவை எதிர்ப்பதற்காக சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று யோசனை தெரிவித்திருந்துத்தார்.

மேலும்,”வீடு பற்றி எரிகிறபோது, கங்கை ஜலத்துக்கு காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம் என்றார். அதே மாதிரிதான் சசிகலாவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. ஒரு அணி என திரளும்போது, கங்கை ஜலத்திற்கு காத்திருக்க முடியாது. எல்லா ஜலத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் என தோன்றுகிறது” என்று குருமூர்த்தி தெரிவித்திருந்தார்.

குடியரசு தின டிராக்டர் பேரணி: கலந்து கொள்ள பயிற்சி பெறும் பெண்கள்

இதற்கு பதிலளித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் “ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மக்களின் மருத்துவர் மறைந்தார் – டாக்டர் சாந்தா மறைவிற்கு தலைவர்கள் அஞ்சலி

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல” என்று அவர் ட்விட்டரில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்