Aran Sei

முன்கூட்டி விடுதலை செய்ய சசிகலா மனு – சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ரூபா தகவல்

Image Credits: The News Minute

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது, சசிகலா அவரது தண்டனை குறைப்பு மற்றும் முன் விடுதலை ஆகிய கோரிக்கைகளை ஆலோசிக்கக்கோரி சிறை அதிகாரிகளிடம் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, அவர் பெற்ற 120 நாட்களுக்கும் மேலான தண்டனை குறைப்பை பரப்பன அக்ரஹார சிறையின் முன்னாள் அதிகாரி நிராகரித்தார். “தற்போது, ​​தண்டனை காலத்தில் சிறையை விட்டு வெளியே செல்லும் சலுகை எதுவும் சசிகலாவுக்கு வழங்கப்படாது” என்று சிறை அதிகாரி ஒருவர் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

பரப்பனா அக்ரஹாரா மத்திய சிறை அதிகாரிகள் இப்போது சசிகலாவின் விண்ணப்பத்தைச் சிறைத்துறைக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் இந்த விவகாரம் குறித்து இன்னும் பதில் அளிக்கவில்லை என் தி இந்து கூறுகின்றது.

குற்றவாளிகளுக்கு நன் நடத்தை அடிப்படையில் மாதத்திற்கு மூன்று நாட்கள் தண்டனை குறைப்பு வழங்கப்படும். “தண்டனை குறைப்பு என்பது ஒரு உரிமை அல்ல, ஆனால் அது சிறை அதிகாரிகளின் விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படும் ஒன்று. சசிகலா, நிராகரிக்கப்பட்ட தண்டனை குறைப்பை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை வைத்துள்ளார். இந்த விண்ணப்பம் தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

தண்டனை குறைப்பு வழங்கப்படவில்லை என்றால் சசிகலாவின் தண்டனை காலம் 2021-ம் ஆண்டு, ஜனவரி 27 அன்று முடிவுக்கு வரும். சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்தொகையை முன்கூட்டியே பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் இந்த மாதம் அவர் செலுத்தியுள்ளார்.

இது குறித்து, அரண்செய்யுடன் பேசிய கர்நாடக உள்துறை செயலர் ரூபா, “சட்ட ரீதியாகவும், விதிமுறைகளின் அடிப்படையிலும் இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள்” என கூறினார்.

ரூபா, ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது, சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறைக்கு புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்