Aran Sei

நூறு கோடி தடுப்பூசி சாதனைக்காக ஒன்றிய அரசைப் பாராட்டிய சசி தரூர் – பதிலடி கொடுத்த காங்கிரஸ்

ந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்துவிட்டதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மத்திய அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஆனால், சசி தரூருரின் கருத்துக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது

கொரோனா தடுப்பூசி 100 கோடி டோஸ் போடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 30 கோடி பேருக்கு இரு டோஸும், 40 கோடி பேருக்கு ஒரு டோஸும் வழங்கியிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி இச்செயல்பாட்டிற்காக பெருமிதம் தெரிவித்திருந்தார்.

‘வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவவாதிகள்’ – கர்நாடக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தும் மாற்றத்திற்கான சட்ட கூட்டமைப்பு

இந்நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறூப்பினர் சசி தரூர் ட்விட்டரில் பதிவிட்ட பாராட்டுச் செய்தியில் “ அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இதற்கு மத்திய அரசுக்குத்தான் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும். கொரோனா 2-வது அலையைச் சரியாக மேலாண்மை செய்யத் தவறியது,போதுமான அளவு தடுப்பூசி இருந்திருந்தால் தடுத்திருக்கலாம். அந்தத் தவற்றை மத்திய அரசு பாதியளவு திருத்திவிட்டது. ஆனால், கடந்த கால தோல்விகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்” எனத் கூறியுள்ளார்.

‘காஷ்மீரில் மீட்டெடுத்ததாக கூறிய அமைதி எங்கே?’- பாஜகவிற்கு ஃபரூக் அப்துல்லா கேள்வி

சசி தரூர் கருத்துக்குப் பதிலடியாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா பதிவிட்ட கருத்தில் “ கொரோனா பரலைச் சரியாகத் தடுக்காமல் , தவறான மேலாண்மை, நிர்வாகத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, குணமடைந்தபின்பும் இன்னும் பக்கவிளைவுகளால் இருப்பவர்களை அவமதிப்பதாக சசி தரூரின் கருத்து இருக்கிறது. இந்த விஷயத்துக்கு பாராட்டு பெறுவதற்கு முன் பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கோர வேண்டும். இந்தப் பாராட்டுகள் அனைத்தும் அறிவியல் விஞ்ஞானிகளுக்கும், மருத்துவத் துறையினருக்கும் சேரும் “ எனத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்