Aran Sei

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பங்கெடுக்கும் விவசாயிகள் சங்கம்: வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடிய விவசாய சங்கங்களின் அரசியல் குழுவான சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 17 வேட்பாளர்கள் அடங்கிய மற்றொரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் தேர்தலுக்காக இதுவரை 57 வேட்பாளர்களை அறிவித்துள்ள சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா, மீதமுள்ளவர்கள் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், ஹர்பிரீத் சிங், மேக்ராஜ் ரல்லா, கிரிஷன் சௌஹான் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் விவசாய சங்கங்கள் – 117 தொகுதியில் போடியிட முடிவு

இது குறித்து பேசியுள்ள சன்யுக்த் சமாஜ் மோர்ச்சாவின் மூத்த தலைவரான ப்ரேம் சிங் பாங்கு, நாங்கள் பஞ்சாப்பில் உள்ள 117 தொகுதிகளிலும் சன்யுக்த் சங்கர்ஷ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், குர்னாம் சிங் சதுனி தலைமையிலான சன்யுக்த் சங்கர்ஷ் கட்சியுடன் தேர்தல் போட்டியிட உள்ளதாக அண்மையில் சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா அறிவித்திருந்தது.

ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ள மூன்று விவசாயச் சட்டங்களை நீக்கக் கோரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்வேறு பஞ்சாப் விவசாயிகள் சங்கங்களில் சில இணைந்து, சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற அரசியல் குழுவைத் தொடங்கி, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தன.

பஞ்சாபின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 20ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்