Aran Sei

பொதிகைத் தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்திக் குறிப்பு : திராவிடர் கழகம்போராட்டம்

பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியில் செய்தி ஒளிபரப்புவதைக் கண்டித்து தடையைமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்துத் தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருதச் செய்தி அறிக்கைக்கு ஒதுக்கவேண்டும் எனவும், வாராவாரம் சனிக்கிழமை 15 நிமிடங்களை வாராந்திர சமஸ்கிருதச் செய்தித்தொகுப்பிற்கு ஒதுக்கவேண்டும் எனவும் கடந்த நவம்பர் மாதம், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் சமஸ்கிருதத்தை, இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை தொலைக்காட்சி நிலையம் முன் தடையைமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு தலைமையில் நடைபெற்றது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்