Aran Sei

ஒன்றிய விசாரணை அமைப்புகளை வைத்து மகாராஷ்ட்ராவின் குரலை பாஜகவால் ஒடுக்க முடியாது – சஞ்சய் ராவத்

ன்றிய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் வழியாக மகாராஷ்டிராவின் குரலை பாஜகவால் நசுக்க முடியாது என்று சிவசேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசும் பாஜகவும் எங்கள் குரலை நசுக்க முயற்சிப்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை அவமதிக்கும் செயல் என்று அவர் கூறியுள்ளார்.

நாக்பூருக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சஞ்சய் ராவத், விதர்பா பகுதி சிவசேனாவிற்கு ஆதரவாக பின்னால் நிற்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த பகுதி (நாக்பூர்) ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்டது உண்மைதான். ஆனால்,  நாக்பூர், மும்பை மற்றும் தானே மாநகராட்சி தேர்தல்களில் சிவசேனா பலமாக களமிறங்குவோம். இந்த முறை நாக்பூர் மாநகராட்சி தேர்தலிலும் நாங்கள் ஆதிக்க செலுத்துவோம்என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்