Aran Sei

இலங்கையைப் போன்றே இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் – சஞ்சய் ராவத் எச்சரிக்கை

லங்கையின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் அந்தப் பாதையில்தான் இந்தியா செல்கிறது என்றும் பிரதமர் மோடியை சிவசேனா மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.

தற்போது, இலங்கை நாடானது பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டும், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை உயர்வும், அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உச்சத்தை தொட்டுள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை – காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் படுகாயம்

இந்தநிலையில், இன்று (ஏப்ரல் 5), இலங்கையின் நிலை குறித்து பேசியுள்ள சஞ்சய் ராவத், “இலங்கையின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அந்தப் பாதையில்தான் இந்தியா சென்றுக்கொண்டிருக்கிறது. நமது பொருளாதாரத்தை நாம் சரியாக கையாளாமல் போனால், நமது நிலை இலங்கையை விட மோசமாகிவிடும்” என்று எச்சரித்துள்ளார்.

“அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். அவரின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன். இந்தியாவின் பொருளாதார நிலையும் மிகவும் மோசமாக உள்ளது. இலங்கையில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுபோன்ற சூழல் இங்கும் ஏற்பட்டு விடக்கூடாது” என்று சிவசேனா மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

Source: ANI

“இலங்கையின் வீழ்ச்சிக்கு இனவாதம்தான் காரணம்”

கூடுதல் தகவலுக்கு க்ளிக் செய்யவும்…

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்