Aran Sei

எதிர்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை பாஜக விரும்புகிறது – மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து

திர்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பாஜக விரும்புகிறது என்று மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியைச் சேர்ந்தயைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “எதிர்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை பாஜக விரும்புகிறது. அதனால், தான் சஞ்சய் ராவத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கம், குஜராத் கள்ளச் சாராய மரணம் போன்ற பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். ஜார்கண்டில் ஆட்சியை கவிழ்க்க பாஜக செய்து வரும் சதி குறித்து கேள்வி எழுப்பபடும்” என்று கூறியுள்ளார்.

சஞ்சய் ராவத்தின் பண்ணை வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை பத்ரா சால் நில மோசடி வழக்கு தொடர்பாக நேற்று அவரை கைது செய்துள்ளது.

Source: ANI

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்