Aran Sei

கொரோனா உயிர்காக்கும் மருத்துவ வசதிகளை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க வேண்டும் – சஞ்சய் ரவுட் வேண்டுகோள்

கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கை வசதி ஆகிய மருத்துவ வசதிகளை மேலாண்மை செய்ய உச்சநீதிமன்றத்தின் தலைமையில்  தேசிய குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்று சிவ சேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ரவுட் தெரிவித்துள்ளார்.

மேலும்,”மத்திய அரசினால் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கப்படுவதில் வெளிப்படைத் தன்மையில்லை” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் மறைமுக நெருக்கடி நிலை நிலவுகிறது – சிவ சேனா எம்.பி சஞ்சய்ரவுட் கருத்து

“மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களுக்கு தேவையான அளவு தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. மத்திய அரசு என்ன செய்துக்கொண்டிருக்கிறது? ” என்றும் சஞ்சய் ரவுட் கேள்வியெழுப்பியுள்ளார்.

பீகார் தலைமை செயலாளர் கொரோனாவினால் மரணமடைந்தது குறித்து தெரிவித்த அவர்,” மாநில நிர்வாகத்தின் தலைவராக உள்ள ஒரு தலைமைச் செயலாளர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இது நாட்டின் நிலைமை மோசமடைந்துள்ளதை பிரதிபலிக்கிறது”என்றும் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

எனவே, உச்சநீதிமன்றம் கொரோனா உயிர்காக்கும் மருத்துவ வசதிகளைக் கண்காணிக்க அதன் தலைமையில் தேசிய அளவில் குழுஒன்று அமைக்கவேண்டுமென்றும் சிவ சேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ரவுட் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்