Aran Sei

இந்தியாவை ஜின்னா ஒருமுறைதான் பிரித்தார்; பாஜக தலைவர்கள் மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி தினம் தினம் பிரிக்கின்றனர் – சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

பாகிஸ்தானை உருவாக்க இந்தியாவை முகமது அலி ஜின்னா ஒருமுறைதான் பிரித்தார் என்றும் ஆனால் பாஜக தலைவா்கள் தங்கள் பேச்சு வழியாக இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே மோதலை ஏற்படுத்தி தினசரி நாட்டைப் பிரித்து வருகிறார்கள் என்று சிவசேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 22), மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற சிவசேனா கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றுள்ள சஞ்சய் ராவத், பின் செய்தியாளா்களைச் சந்தித்து பேசியுள்ளார்.

‘நேரு, இந்திரா, ராஜிவ், மன்மோகன் உருவாக்கிய கட்டமைப்பால் தப்பிப்பிழைக்கும் இந்தியா’ – கொரோனா பேரிடர் குறித்து சிவசேனா

அப்போது, “இந்தியாவில் 22 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வாழ்கின்றனா். அவா்களில் பலா் பாஜகவுக்கும், சிவசேனைக்கும் வாக்களித்துள்ளனா். பாகிஸ்தான் நாட்டை உருவாக்க முகமது அலி ஜின்னா இந்தியாவை ஒருமுறைதான் பிரித்தார். ஆனால், பாஜக தலைவா்கள் தங்களின் பேச்சுகளின் வழியாக இந்துகளுக்கும் இஸ்லாமியர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி நாட்டை தினசரி பிரித்து வருகிறார்கள்” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமலாக்கத் துறை 23 சோதனைகளைதான் நடத்தியது. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளில் பாஜக அரசு 23 ஆயிரம் சோதனைகளை நடத்தியுள்ளது. இவை பெரும்பாலும் மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் நடைபெற்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் சோதனைகள் நடத்தப்படுவதில்லை?” என்று சிவசேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்  சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்