Aran Sei

‘100 கோடி டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது பொய் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது’- சிவசேனா எம்.பி

நாட்டில் 100 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டதாக கூறுவது முற்றிலும் பொய் என்றும், தகுதிவாய்ந்த குடிமக்களுக்கு இதுவரை 23 கோடிக்கு மேல் டோஸ் வழங்கப்படவில்லை என்றும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று(அக்டோபர் 23), மகாராஷ்டிரா மாநிலம் நாஸிக்கில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் உரையாற்றிய சஞ்சய் ராவுத், “100 கோடி தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாக கூறுவது முற்றிலும் பொய் என்பதற்கு நான் ஆதாரம் தருகிறேன். நீங்கள் எவ்வளவு பொய்தான் சொல்வீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“கடந்த பதினைந்து நாட்களில், 20 இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 17 முதல் 18 வீரர்கள் வரை வீரமரணம் அடைந்துள்ளனர். அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் சீனா பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. ஆனால் நாம் 100 கோடி தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாக கூறும் பொய்யை கொண்டாடுகிறோம். இந்த எண்களை யார் கணக்கிட்டார்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அக்டோபர் 21 அன்று, கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து திட்டத்தில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது என்றும் நாட்டில் செலுத்தப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ள்ளது என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, நாட்டின் சில பகுதிகளில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்