Aran Sei

விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் – பிரதமர் மோடிக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா வேண்டுகோள்

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்  பெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடிதம் அனுப்பியுள்ளது.

பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தங்களது  கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையை ஒன்றிய அரசு உடனே தொடங்க வேண்டும் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா வலியுறுத்தியுள்ளது.

விவசாயிகள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு விசாரணை வேண்டும் – தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

அனைத்து விவசாயிகளுக்கும் விளைபயிர்களுக்கு சாகுபடி செலவுக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதை உறுதிசெய்ய சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்துத்துவாவின் புதிய கண்டுபிடிப்பு ‘எச்சில் ஜிகாத்’ – உணவில் எச்சில் துப்பியதாக இஸ்லாமியர்கள் கைது

மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், டெல்லி மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் காற்றுத்தர மேலாண்மைக்கான சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களை நீக்க வேண்டும் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவை தவிர, லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்கவேண்டும் எனவும் அவரை கைது செய்யவேண்டும் என்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா பிரதமர் மோடிக்கு எழுதியக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்