Aran Sei

லக்கிம்பூர் வன்முறை: ‘அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்க’ – ரயில் மறியல் போராட்டம் அறிவித்த விவசாயிகள்

ட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரவையில் இருந்து உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை நீக்கக் கோரி, இன்று(அக்டோபர் 18) நாடு முழுவதும் ஆறு மணி நேரம் ரயில் மறியல் போராட்டத்திற்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, நேற்று(அக்டோபர் 17), ஒன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதோட நில்லாமல், அவரைக் கைது செய்தால்தான் லக்கிம்பூர் கேரி வன்முறைக்கு நீதி கிடைக்கும். அதை வலியுறுத்தி, அக்டோபர் 18 அன்று நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தை சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 18 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆறு மணி நேரம் ரயில் போக்குவரத்தை நிறுத்துமாறு மோர்ச்சா வேண்டுகோள் விடுத்துள்ளது.

Source: NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்