Aran Sei

‘போராடும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் சர்வாதிகார போக்கானது’ – வழக்குகளை திரும்பப் பெற விவசாயிகள் வலியுறுத்தல்

ன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி, டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, நேற்று (ஜூன் 27), போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒறுங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “சண்டிகர் காவல்துறையால் இந்திய குற்றவியல் சட்டம் 147, 148, 149, 186, 188, 332 மற்றும் 353 பிரிவுகளின் கீழ் பல வழக்குகள், சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர்கள் மீதும், போராடும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ளன. சாலைகளைத் தடுப்புகளால் தடுத்து வைத்ததோடு, போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீரங்கி, லாத்திசார்ஜ் ஆகியவற்றை காவல்துறையினர் பயன்படுத்தினர்.” என்று அக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

தேவைப்பட்டால் டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கிச் செல்வோம் – ராகேஷ் திகாயத்

இந்த வகையான ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார போக்கின் உச்சமாக, இப்போது சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும்  அவ்வழக்குகளை உடனடியாகவும் நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டும் என்று அவ்வறிக்கையில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா வலியுறுத்தியுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் ஏழு மாதங்கள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், நேற்று (ஜூன் 26), டெல்லியில் டிராக்டர் பேரணியை மேற்கொண்டு, மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஆளுநர்களுக்கு கோரிக்கை மனுக்களை அளிக்க விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

ஏழு மாதங்களை நிறைவு செய்த விவசாயிகள் போராட்டம்: மீண்டும் டெல்லியில் டிராக்டர் பேரணி செல்ல விவசாயிகள் முடிவு

இதுகுறித்து, அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அக்குழு, “பல இடங்களில், விவசாயிகள் ஆளுநர் மாளிகைகளுக்குப் பேரணி செல்லக் கூட அனுமதிக்கப்படவில்லை. மேலும், மோர்ச்சா தலைவர்களை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இது ஜனநாயகத்தின் தோல்வி. அறிவிக்கப்படாத அவசரநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஜூன் 25 ஆம் தேதி பாஜகவின் கூட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 15 விவசாயிகள்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.” என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா வலியுறுத்தியுள்ளது.

Source; pti

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்