Aran Sei

‘வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி உ.பி மாநிலம் முழுதும் விவசாயிகளின் மகாபஞ்சாயத்துகள்’ – போராடும் விவசாயிகள் குழு அறிவிப்பு

த்தரபிரதேச மாநிலத்தின் அனைத்து கோட்ட தலைமையகங்களிலும், இந்த மாத இறுதியில், விவசாயிகளை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரியும் விவசாயிகள் பஞ்சாயத்துகளை நடத்தவுள்ளதாக போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.

நேற்று (செப்டம்பர் 9), பாரதிய கிசான் யூனியனின் ஊடகப் பொறுப்பாளர் தர்மேந்தர் மாலிக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல் விவசாயிகள் பஞ்சாயத்து செப்டம்பர் 29 அன்று ஷாஜகான்பூர் கோட்ட தலைமையகத்தில் உள்ள தில்ஹாரில் ஏற்பாடு செய்யப்படும். மற்ற பஞ்சாயத்துகளின் தேதிகளை பாரதிய கிசான் யூனியன் முடிவு செய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 18 கோட்டங்களிலும் உள்ள விவசாயிகள் சங்கங்களின் கூட்டங்களை ஏற்பாடு செய்யவுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நிலவும் மின் கட்டணங்கள் உயர்வாலும் சர்க்கரை ஆலைகளில் நிலுவையில் உள்ள கரும்பு விவசாயிகளின் நிலுவை தொகையாலும் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தாண்டு அக்டோபர் தொடங்கி, ஒன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி, டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Source: PTI

தொடர்புடைய பதிவுகள்:

நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் கூடும் மகா பஞ்சாயத்து – விவசாய சட்டங்களை நீக்காதவரை போராட்டம் தொடருமென அறிவிப்பு

விவசாய சட்டத்தை திரும்பப்பெறக்கோரி பாஜக தலைவருக்கு எதிரான போராட்டம் – விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறை

‘விவசாய சட்டங்கள் பாஜகவின் கோடீஸ்வர நண்பர்களுக்கானது’ – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்