Aran Sei

விவசாயிகள் போராட்டத்தில் இருந்து 2 சங்கங்கள் விலகல் – அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதாக சம்யுக்ட் கிசான் மோர்ச்சா தகவல்

குடியரசு தின டிராக்டர் பேரணியில் நடைபெற்ற நிகழ்வுகளை அடுத்து டெல்லியின் எல்லையில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டத்திலிருந்து விலகுகிறோம் என  இரண்டு விவசாய சங்கங்கள் தெரிவித்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டத்திலிருந்து விலகுவுதாக ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் சங்கதான் மற்றும் பாரதிய கிசான் யூனியன் சங்கங்கள் விலகுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”குறைந்தபட்ச ஆதார விலை உத்திரவாதம் இருக்கும் வரை விவசாயிகள் போராட்டம் இருக்கும், ஆனால் இந்த வழியில் அல்ல. மக்கள் உயிர் தியாகம் செய்யப்படுவதற்காகவோ, தாக்குதலுக்குள்ளாவதற்கோ வரவில்லை. போராட்டத்தை வேறு திசையில் கொண்டு செல்லும் மக்களுடன், சேர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது” என ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் சங்கதான் தலைவர் வி எம்சிங் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வன்முறையில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்” – விவசாயிகள் போராட்டத்தின் நேரடி சாட்சி

விவசாய போராட்டங்களால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட அதிர்வுகளை அடுத்து, போராட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில செயல்கள் நிகழ்த்தபட்டது எனச் சம்யுக்த் கிசான் மோர்சா (எஸ்கேஎம்) குற்றம்சாட்டி யிருப்பதாகத் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பஞ்சாப்பின் மூத்த தொழிற்சங்க தலைவர் பல்வீர் சிங் ராஜேவல் தலைமையில், சம்யுக்த் கிசான் மோர்சாவி அவசர கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பின்னால் பாஜக இருக்கிறது – முதல் தடுப்பை உடைத்த விவசாயி சத்னம் சிங் பன்னு குற்றச்சாட்டு

போரட்டங்களுக்கு தலைமை தாங்குவது குறித்து சிங் பார்டர் பகுதியில் கூட்டம் நடைபெற்று கொண்டு இருப்பதாகவும், விவசாயிகள் அனைவரும் களத்தில் தங்கி போராட்டத்தைத் தொடர யூனியன் தலைவர் கேட்டுக்கொண்டு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்ற நோக்கிப் பேரணி செல்ல இருக்கிறோம்  எஸ்கேஎம் தெரிவித்ததாகத் தி ஹிந்து கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்