புதிய வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு ஆண்டு நிறைவை சம்பூர்ண கிராந்தி திவாஸ் அல்லது முழு புரட்சி நாளாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக சம்யுக்ட் கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, எஸ்கேஎம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதிய வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் அறிமுக செய்யப்பட்ட ஜூன் 5 ஆம் தேதியை, சம்பூர்ண கிராந்தி திவாஸ் அல்லது முழு புரட்சி நாளாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பாஜக தலைவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் முன்பு, ஜெய்பிரகாஷ் நாராயணனின் வரலாற்று சிறப்புமிக்க கோஷங்களை முழக்கமிட்டு, புதிய வேளாண் சட்டங்களை நகல்களை எரிக்கும் செயல்களில் விவசாய சங்கங்கள் ஈடுபட வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில், அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் சட்டங்கள், செப்டம்பர் மாதம் சட்டமாக நிறைவேறியது. 1974 ஆம் ஆண்டு, அவசரநிலையின் போது அப்போதையை பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக வெகுஜன போராட்டமான சம்பூர்ண் கிராந்திக்கு ஜெயபிரகாஷ் நாராயணன் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 6, 2017 ஆம் தேதி மத்திய பிரதேச மவுண்ட்சவுரில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
”மவுண்டசவுரில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தியாகிகள் மற்றும் இந்த இயக்கத்தின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் மற்றும் காவல்துறையினரின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் பயப்படாமல், இறுதிவரை போராடுவோம் என்று உறுதி மொழி ஏற்க வேண்டும்” என விவசாயிகளுக்கு சம்யுக்ட் கிசான் மோர்ச்சா தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.