Aran Sei

சாமியார் ஆசாராம் பாபு பாலியல் வன்கொடுமை வழக்கு – பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு மிரட்டல் கடிதம்

2018 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டிற்காகச் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 21 அன்று சாமியார் ஆசாராம் பாபுவின் பக்தர் என்று கருதப்படும் நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு, பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பள்ளி மாணவியின் குடும்பத்தினர் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி காவல்துறையினரிடம் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்குடும்பத்தின் பாதுகாப்பிற்காக முன்பு 2 காவலர்கள் பணி அமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் 3 காவலர்கள் பாதுகாப்புக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Source : NDTV

அயோத்தியா மண்டபத்தை வைத்து அரசியல் செய்கிறது பாஜக தோழர் மருதையன் விளாசல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்