Aran Sei

ஓரே பாலின திருமணம் இந்திய குடும்ப அமைப்புக்கு எதிரானது- மத்திய அரசு

credits : nbcnews

ரே பாலினத்துக்குள் திருமணம் செய்து கொள்வது, சேர்ந்து வாழ்வது,   உடலுறவு வைத்துக் கொள்வது போன்றவை இந்திய குடும்ப முறைக்கு எதிரானது என மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம், ஒரே பாலினத்துக்குள் நடைபெறும் திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என, அபிஜித் ஐயர் மித்ரா உட்பட மூன்று பேர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ராஜீவ் சஹாய் தலைமையிலான அமர்வு, மத்திய அரசு இதற்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஒரே பாலினத்துக்குள் நடைபெறும் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரும், மனுவை ரத்து செய்யக் கோரி பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, ”திருமணச் சட்டங்கள் இயற்கையான ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையிலான திருமணத்தை மட்டுமே அங்கீகரிக்கிறது. ஒரே பாலினத்துக்குள் சேர்ந்து வாழ்வது, உடலுறவு வைத்துக் கொள்வது போன்றவற்றை கணவன், மனைவி, குழந்தைகள் என தொன்று தொட்டு இருக்கும் இந்திய குடும்ப அமைப்பு முறையுடன் ஒப்பிட முடியாது” என்று தெரிவித்துள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.

தைவான் ராணுவத்தில் ஒரே பாலின ஈர்ப்பாளர்களுக்குத் திருமணம்

ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதற்கான எந்தச் சட்டமும் இல்லை என்றும், நாடாளுமன்றம் தலையீட்டு ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்து சட்டம் இயற்றினால் மட்டுமே அந்த திருமணம் அங்கீகரிக்கப்படும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே பாலின திருமண விவகாரம் – சனாதனத்திற்கு இடமில்லை – நீதிபதி கருத்து

அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படும் நீதிமன்றம், ஏற்கனவே உள்ள சட்டங்களையும் உரிமைகளையும் பகுப்பாய்வு மட்டுமே செய்ய முடியும் என்றும், புதிய சட்டங்களை உருவாக்க முடியாது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

‘ஒரு பாலின இணையர்களுக்குக் குடும்ப உரிமை உள்ளது’ – போப் பிரான்சிஸ்

திருமணம் என்பது இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கிடையில் நடைபெறும் நிகழ்வு என்றாலும் அதில் ஏற்படும் பிரச்சனைகளை இரண்டு தனிநபருக்கான பிரச்சனை என சுருக்கிவிட முடியாது என மனுவில் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஓரினசேர்கையாளரை பணி நீக்கிய அரசு – மீண்டும் பணியில் அமர்த்திய நீதிமன்றம்

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரி தாக்கல் செய்துள்ள மனு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஆகவே, இந்த மனுவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்