Aran Sei

Love is Love: தன்பாலின திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கிய சிலி நாடாளுமன்றம்

தென் அமெரிக்க நாடான சிலியில், தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்கு மேலாக நீண்டுக்கொண்டிருந்த சட்ட போராட்டத்திற்குப் பிறகு, நேற்று(டிசம்பர் 7), இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சிலி நாட்டில் சமூக வளர்ச்சித்துறை அமைச்சர் கர்லா, “இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். நம் நாடு தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. நீதியை நோக்கிய பயணத்திலும், சமத்துவத்திலும், காதலை காதலாக அங்கீகரித்ததிலும் நாம் ஓர் அடி முன்னகர்ந்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

‘நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு; கொலிஜியம் முறையை மாற்ற வேண்டும்’ – திருமாவளவன்

சிலி நாட்டின் செனட் சபையும் நாடாளுமன்றத்தின் கீழ் சபையும், இம்மசோதாவிற்கு பெருவாரியான வாக்கை அளித்து, ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னதாக, நவம்பர் மாதம் இம்மசோதா செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டபோது, குறைந்த வாக்குகளை பெறவே, அம்மசோதா ஒரு சிறப்பு குழுவிற்கு அனுப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது.

தற்போதைய குடியரசுத் தலைவர் செபாஸ்டியன் பினேராவுக்கு வரும் மார்ச் மாதத்தோடு பதவி காலம் நிறைவுறுகிறது. அதனால், விரைவிலேயே அம்மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, சட்டமாக்க கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாரணாசியில் மோடியின் வருகைக்காக காவி சாயம் பூசப்பட்ட மசூதி – எதிர்ப்பு வலுத்ததால் வெள்ளை நிறம் அடித்த மாவட்ட நிர்வாகம்

இம்மசோதா நிறைவேற்றப்பட்டதன் வழியாக, தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் 20 ஆவது நாடாகிறது சிலி. தென் அமெரிக்க நாடுகளில் அர்ஜென்டீனா, பிரேசில், கொலம்பியா, கோஸ்டா ரிகா மற்றும் உருகுவே உட்பட நாடுகளும் அவற்றுள் அடங்கும்.

சிலி நாட்டு  அதிபருக்கான தேர்தல் டிசம்பர் 19 அன்று நடக்கவிருக்கிறது. முற்போக்குவாதியாக கருதப்படும் கேப்ரியல் போரிக்குக்கும் பழமைவாதியாக கருதப்படும் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு பேரும் அந்நாட்டின் எதிர்காலம் குறித்து வெவ்வேறான பார்வைகளை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்