Aran Sei

மோடி தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி – வாரணாசியில் முதல்முறையாகப் பின்னடைவு

credits : arunachal observer

பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்த இரண்டு சட்டமன்ற மேலவை தொகுதிகள் சமாஜ்வாதி கட்சியால் கைப்பற்றப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தின் சட்டமன்றம் இரு அவைகளைக் கொண்டுள்ளது. விதான் சபை (கீழ் அவை), விதான் பரிஷத் (மேல் அவை) ஆகும். உத்தரப்பிரதேசச் சட்டமன்ற கீழ் அவையில் 403 உறுப்பினர்களும் மேலவையில் 100 உறுப்பினர்களும் உள்ளனர்.

முன் அனுமதியுடன் கோவிலில் தொழுகை செய்தவர் கைது – உத்தர பிரதேச காவல்துறை நடவடிக்கை

இந்நிலையில் கடந்த மே மாதம் 6-ம் தேதி 11 சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் (எம்எல்சி) பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையடுத்து காலியாகியுள்ள பதினோரு மேலவை தொகுதிகளுக்கும் டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது . இந்தத் தேர்தலில் வெற்றி பெற அனைத்துக் கட்சிகளும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன.

உத்தரப்பிரதேச மேலவைக்கான இந்தத் தேர்தலில் பட்டதாரிகளுக்கு ஐந்து இடங்களும் ஆசிரியர்களுக்கு ஆறு இடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சியின் ஆதரவு ஆசிரியர் அமைப்புகளின் வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். 11 இடங்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில் 199 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

நடைமுறையில் இல்லாத 66ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு – உத்தரப்பிரதேச அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியும் கடந்த பத்து ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாகவும் இருந்த வாரணாசியின் இரண்டு சட்டமன்ற மேலவை தொகுதிகளும்  சமாஜ்வாதி கட்சியால் கைப்பற்றப்பட்டுள்ளன. பாஜக ஆளும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் இது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்டுகிறது என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

credits : newsclick
credits : newsclick

ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் லால் பீகாரி யாதவ் வெற்றிபெற்றுள்ளார். பட்டதாரிகளுக்காக ஒதுக்கிய தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் அஷுதோஷ் சின்ஹா வெற்றி பெற்றுள்ளார் என என்டிடிவி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

credits : the wire
credits : the wire

“இது ஒரு மிகப் பெரிய வெற்றி. தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளிக்கிறது” என ஆசிரியர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் லால் பிஹாரி யாதவ் கூறியுள்ளார் என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் நடைபெற்ற 11 தொகுதிகளில் பாஜக நான்கு தொகுதிகளையும், சமாஜ்வாதி கட்சி மூன்று இடங்களையும், சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களையும் கைப்பற்றியுள்ளனர் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேச மசூதியில் அனுமன் பாடல் – 4 பேர் கைது

மாநில சட்டமேலவை (விதான் பரிஷத்) என்பது இந்திய மாநிலங்களில் சட்டமியற்றும் சட்டமன்றங்களின் மேலவையைக் குறிப்பதாகும். இந்தியாவின் 29 மாநிலங்களில் 6 மாநிலங்களில் சட்ட மேலவை உள்ளது. அவை உத்தரப்பிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரம், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம். தமிழ்நாடு சட்டமன்ற மேலவை 1950-86 காலகட்டத்தில் செயல்பட்டது. 1986ல் கலைக்கப்பட்ட இந்த அவை 2010ல் மீண்டும் உருவாக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்