Aran Sei

“வரலாற்றில் நாம் தவறாக மதிப்பிடப்படுவோம்” – காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களுக்கு உருக்கமான கடிதம்

credits : the indian express

காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து குறை கூறுவது, இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வருவோம் என்று நம்புகின்ற எண்ணற்ற கட்சி தொண்டர்களுக்கு என்ன நம்பிக்கையை தரும் என்றும், வரலாறு நம்மை  எவ்வாறு மதிப்பிடப்படும் என்றும் அக் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், கட்சியின் எதிர்ப்புக் குழு (ஜி 23) தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைமையின் மேல் அதிருப்தி கொண்ட மூத்த தலைவர்கள் 23 பேர் (ஜி 23 என்று அழைக்கப்படுகின்றனர்) ஜம்மு காஷ்மீரில் பேரணி நடத்தினர். குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் ஷர்மா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த அதிருப்தி குழுவில் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருவதாகாவும், காங்கிரஸ் கட்சிக்குள் தேர்தல் நடத்தவும், கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித், ஜி 23 தலைவர்களுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி – கலவரம் நடைபெற்ற வார்டை கைப்பற்றிய காங்கிரஸ்

அந்த கடிதத்தில். ”ஜி 23-ல் இடம்பெற்றுள்ள தலைவர்கள் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் வரலாற்று சாதனைகளை படைத்துள்ளனர். ஆனால் ஆயிரக்கணக்கான, வெளியே பெயர் தெரியாத தொண்டர்கள் எந்த பலனையும் அனுபவிக்காமல் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்டு கட்சிக்கு கடுமையாக உழைத்துள்ளனர். ஜி 23 தலைவர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர், அவர்கள் கோரியபடி கட்சிக்குள் தேர்தல் தகுந்த நேரத்தில் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

” இந்திரா காந்தியின் அவசர நிலை தவறான முடிவு ” – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து

”சமீப காலமாக வலுப்பெற்றுக் கொண்டிருக்கும், பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரிவினைவாத அரசியலை எதிர்த்து போராடிய கடந்த 50 ஆண்டு கால வரலாறு எளிதானதல்ல. போலி மதச்சார்பின்மை அல்லது சமரச மதச்சார்பின்மையை பேசும் நாம், மதச்சார்பின்மையை கடைபிடிக்கவில்லை என்கின்ற கருத்துக்குள் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம்” என்று அந்த கடிதத்தில் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் இஸ்லாமிய கட்சியுடன் கூட்டணி – காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ள ஆனந்த் சர்மா

மேலும், “வகுப்புவாத சக்திகளின் அசுர வளர்ச்சி, நமது சுய உணர்வை பாதிப்படையச் செய்துள்ளது. அதன் முடிவாக, நாம் சிறுபான்மையினர்கள் பற்றி பேசுவதில் இருந்து விலகி, பாஜக போல கலாச்சார அடையாளங்களுடன் நம்மை ஒப்பிடத் தொடங்கிவிட்டோம். பொது மக்களின் எண்ணவோட்டத்திற்கு ஏற்ப நமது தலைவர்கள் செய்தவற்றை, தவறு என்று ஒப்புக்கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆளாகிவிட்டோம்” என்று அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமையிலிருந்து காங்கிரஸ் விலக வேண்டும் – சிவசேனா யோசனை

”இது யதார்த்திற்கும், கற்பனைக்கும், திட்டத்திற்கும், சித்தாந்த்திற்குமான இடைவெளியை சமன்படுத்த வேண்டியதற்கான தேவையை உணர்த்துகிறது. நமக்கு அனைத்து விதமான தலைவர்களும் தேவை. மூத்தவர்கள், இளம் வயதினர், மகிழ்ச்சியானவர்கள், மகிழ்ச்சியற்றவர்கள், சித்தாந்தவாதிகள், லட்சியவாதிகள், ஆதரவு பெற்றவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஜனநாயக குறைபாட்டை சரி செய்ய வேண்டும்” என்று சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார்.

‘பிரதமர் மோடி தன் சுயத்தை மறைப்பவரல்ல’ – மோடியைப் புகழ்ந்த காங்கிரஸ் தலைவர்

”ஜனநாயகம் என்பது ஒரு செயல்முறை, அது நிலையானது அல்ல என்பதை ஜி 23 தலைவர்கள் மறந்துவிடக் கூடாது. நீங்கள்,  வாழ்க்கையின் உச்சிக்கு ஏற உதவிய ஏணியை எட்டி உதைப்பது நியாயமா என்று கேட்பது நியாயமான  கேள்வியாகவே இருக்கும்” என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரட்டை வேடும் போடும் திரிணாமூல் காங்கிரஸ் – அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்

“இந்த கடினமான காலகட்டத்தை கடக்க இரண்டு வழிகள் உள்ளன, காங்கிரஸ் கட்சி நமக்கு கொடுத்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் எண்ணி பார்ப்பது அல்லது காங்கிரஸ் கட்சி நமக்கு என்ன கொடுக்கவில்லை என்பதை எண்ணி பார்த்து கட்சியை குறை கூறுவது” என்று கூறியுள்ள சல்மான் குர்ஷித் “நாம் இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்தால்,  இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வருவோம் என்று தொடர்ந்து நம்புகிற எண்ணற்ற கட்சி தொண்டர்களுக்கு நாம் என்ன நம்பிக்கையை தர போகிறோம். தவிர, வரலாற்றால் நாம் எவ்வாறு மதிப்பிடப்படுவோம்?” என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் வெற்றி பெற்றால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மட்டோம் – ராகுல் காந்தி

”வருங்கால இந்தியாவில் நமக்கு என்ன பங்கு இருக்கும், நமது கட்சி நமக்கு என்ன கொடுக்கும் என்று கேட்பது மரியாதைக்குரியதா? இந்தியா கேட்டில் தேசிய தியாகிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டதைப் போலவே, காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் வரலாற்றின் ஒரு பகுதியாக எண்ணற்ற பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எங்களில் பெரும்பாலானோருக்கு இதுவே (காங்கிரஸ் அலுவலகத்தில் பெயர் பொறிக்கப்படுவது) போதுமான அங்கீகாரம்” என்று சல்மான் குர்ஷித், ஜி-23 தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்