Aran Sei

‘சிறுபான்மையினர் தங்கள் பிரச்சனைகளை எழுப்புகையில் கவனமாக இருக்க வேண்டும் ” – காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷ்த்

சிறுபான்மை சமூகங்கள் தங்கள் பிரச்சினைகளை எழுப்புகையில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சமூகத்தை பிளவுபடச் செய்ய பாஜகவுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய வெளியுறவுத் துறையின் முன்னாள் அமைச்சருமான சல்மான் குர்ஷித் அறிவுறுத்தியுள்ளார்.

இஸ்லாமிய சமூகத்தினர் இச்சமுதாயத்தில் உள்ள அனைத்து பிரிவினருடனும் இணக்கமாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (மார்ச் 21), ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், அம்மாநில உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த கவுன்சிலர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் சல்மான் குர்ஷித் கலந்துக்கொண்டுள்ளார்.

மங்களூர்: சிஏஏ போராட்டத்தின் ஓராண்டு நிறைவு – இன்றும் அச்சத்தில் வாழும் இஸ்லாமியர்கள்

அப்போது, “நம்முடைய பிரச்சினைகளை எழுப்பும்போது நாம் கவனமாகவும் விழிப்புடனும் இருப்பதன் வழியாக, இச்சமுதாயத்தை பிளவுபடுத்த நினைக்கும் பாஜகவை நாம் தடுக்க வேண்டும். நம்முடைய பிரச்சினைகளை எழுப்புவதற்கு நாம் அஞ்சக்கூடாது. காங்கிரஸ் எப்போதும் நம் நாட்டின் ஒற்றுமைக்காகவே செயல்பட்டது. ஆனால், இன்றோ ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.” என்று சல்மான் குர்ஷித் விமர்சித்துள்ளார்.

இவ்விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இஸ்லாமியர் அல்லாதவர்களும்நம் கோரிக்கைகளுக்காக எப்போதும் குரல் கொடுப்பதும் போராடுவதும் நம்முடைய அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்