Aran Sei

நீட் தேர்வு பயத்தால் சேலம் மாணவர் தற்கொலை – எப்போது ஓயும் இந்த மரண ஓலம்

சேலம் மாவட்டம் கூழையூரில் நீட் தேர்வு எழுதவிருந்த தனுஷ் என்ற 19 வயது மாணவர், தேர்வு பயத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கூழையூரைச் சேர்ந்த மெஷின் ஆப்பரேட்டர் சிவக்குமார். இவரின் மனைவி சிவஜோதி. இவர்களின் முதல் மகன் நிஷாந்த் பொறியியல் படித்து வருகிறார். ஏற்கெனவே, இரண்டாவது மகன் தனுஷ் , 2019-ல் இருந்து நீட் தேர்வை எழுதி வருகிறார். இதில் பல் மருத்துவத்துக்கு இடம் கிடைத்தபோதும் எம்பிபிஎஸ்தான் படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளார். இதனால் மீண்டும் தேர்வை எழுத முடிவெடுத்து தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார்.

2 முறை நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில், இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தனுஷ் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மேச்சேரியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தனுஷ் நீட் தேர்வை எழுதுவதாக இருந்தது. எனினும் தேர்வு குறித்த அச்சத்தில் இருந்த தனுஷ், தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவர் தனுஷ் தற்கொலை தொடர்பாக கருமலைக்கூடல் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்