Aran Sei

சேலம்: பிஎச்டி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் – பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மாணவி கொடுத்த புகாரின் மீதான விசாரணையில், பதிவாளர் மாணவியிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்ததாகக்கூறி அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக கோபி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பல்கலைக்கழக முழுநேர பொறுப்பு பதிவாளராக கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வருகிறார். மேலும் மூன்று மாணவிகளுக்கு ஆராய்ச்சி வழிகாட்டியாக இருந்து வருகிறார். இந்தநிலையில்,  கடந்த ஞாயிற்றுக்கிழமை (24/07/22) ஆய்வறிக்கையை சரி பார்ப்பதற்காக மாணவியை நேரில் வர அறிவுறுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது இல்லத்திற்கு அவர் மாணவியை வரவழைத்ததாக கூறப்படுகிறது.

உலக நாடுகளின் தலையீடு இல்லாவிட்டால், இந்தியா இனவெறி நாடாக மாறும் அபாயம் உள்ளது – நெல்சன் மண்டேலேவின் பேத்தி நிடிலேகா மண்டேலா கருத்து.

அவர் அறிவுறுத்தலின்பேரில் அம்மாணவி, மாலை 5 மணிக்கு தனது உறவினர் ஒருவருடன் பதிவாளர் இல்லத்திற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது மாணவியுடன் சென்ற உறவினர் வெளியே டீகுடிக்க சென்றதாகவும், அப்போது மாணவி தனியாக இருந்ததை பதிவாளர் கோபி தனக்கு சாதகமாக்கி மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பதிவாளரின் செயலால் மாணவி அதிர்ச்சியடைந்து. அங்கிருந்து வெளியேறி உள்ளே நடந்தது குறித்து தனது உறவினரிடம் கூறியதாக தெரிகிறது. இதன் பின்னர் இதுதொடர்பாக கருப்பூர் காவல். நிலையத்தில் மாணவி புகார் அளித்துள்ளார். தனது புகாரில், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்” என அவர் தெரிவித்திருக்கிறார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் பல்கலைக்கழகதில் விசாரணை நடத்தத் தொடங்கி உள்ளனர். இப்புகாரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்’ வழக்குப்பதிவு செய்த கருப்பூர் காவல்துறையினர், அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்துள்னர்.

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ. 40 ஆயிரம் கோடி ஈட்டியுள்ளன – ஒன்றிய அரசு தகவல்

இந்நிலையில் ஆராய்ச்சி மாணவி சில அடையாளம் தெரியாத மூன்று நபர்களுடன் தனது வீட்டிற்குள் புகுந்து தன்னை தாக்கியதாக கூறி, பதிவாளர் கோபியும் தெரிவித்திருக்கிறார். சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தான் சேர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்தும் கருப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இரு தரப்பு புகார்களின் அடிப்படையில் சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், விசாரணை முடிவில் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி ஆராய்ச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் இதை மறைக்க தன் தரப்பில் காவல்துறையினரிடம் போலியான புகார் ஒன்றை அளித்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பெண் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோபியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு வைத்துள்ளனர்.

Source: Puthiyathalaimurai

Kalaignar இன் பேனா அது பேனா இல்ல வாள் | கொதிக்கும் பார்ப்பன அடிவருடிகள் | Surya Xavier | Marina DMK

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்