Aran Sei

10 லட்ச ரூபாய்க்கு மகளை விற்ற தாய் – பாட்டியின் புகாரால் மீட்கப்பட்ட சிறுமி

Image Credits: New Indian Express

சேலம் மாவட்டத்தில் தனது மகளைத் தொழிலதிபரிடம் 10 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக அந்தச் சிறுமியின் தாய் பேசும் தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது.

அந்தக் உரையாடலில் சிறுமியின் தாய் தொழிலதிபரிடம் தனது மகளை 10 லட்சம் ரூபாய்க்க விற்றுவிட்டதாகத் தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

மூடநம்பிக்கையால் நடந்த விபரீதம்: பெற்ற மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர்கள்

இந்நிலையில், சிறுமியின் பாட்டி சின்னபொண்ணு சேலம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், 7 வயதாகும் தனது பேத்தி சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்து வருவதாகவும், அவர் தனது பேத்தியைக் காண்பிக்க மறுப்பதாகவும் புகார் அளித்திருந்தார்.

`வன்கொடுமைக்கு ஆளான 12 வயது மகள்’ – நியாயம் கேட்கும் இருளர் தாய்

இதைத் தொடர்ந்து தொழிலதிபர் வீட்டிலிருந்து அந்தச் சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், சிறுமியின் தாய் பேசிய உரையாடல் குறித்து சேலம் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

SOURCE ; PUTHIYA THALAIMURAI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்