Aran Sei

‘கொரோனா கால பணிக்கு ஊக்கத்தொகை வேண்டும்‘ – தமிழக அரசிற்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் கோரிக்கை

ரசு பயிற்சி மருத்துவர்களுக்கு அடிப்படை ஊதியத்தை உயர்த்திட வேண்டும் என்றும்  கொரோனா காலத்தில் ஊக்கத்தொகையையும் வழங்க வேண்டும்  என்றும்  தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் கோரிக்கைகளை வைத்துள்ளது.

இன்று (மே 18), மருத்துவம், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கும் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

அக்கோரிக்கை மனுவில், “22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களாக பணிபுரியும் 144  அன்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய சலுகைகளையும் வழங்க வேண்டும். அரசு பயிற்சி மருத்துவர்களுக்கு அடிப்படை ஊதியத்தை உயர்த்திடவும்,  கொரோனா காலத்தில் ஊக்கத்தொகையையும் வழங்க வேண்டும்.  அரசு கல்லூரிகளில் முதுநிலை   பட்டப்படிப்பு  (MD/MS) மற்றும் உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவம் (DM/Mch) பயிலும் மருத்துவர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்திட வேண்டும்.” என்று கோரியுள்ளனர்.

‘அதிக பணிச்சுமை; குறைந்த உதவித்தொகை’ – உதவித்தொகையை உயர்த்த தமிழக அரசிற்கு பயிற்சி மருத்துவர்கள் வேண்டுகோள்

மேலும், “அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் தேர்ச்சி பெற முடியாத மாணவர்களுக்குத் துணைத் தேர்வு முறையை அனைத்து  ஆண்டு மாணவர்களுக்கும் கொண்டு வர வேண்டும். FMGE-ல்(Foreign medical graduate Examination) தேர்ச்சி பெற்றுள்ள FMG மாணவர்களை, எந்தக் கட்டணமுமின்றி  ஊதியத்துடன் பயிற்சி மருத்துவர்களாக அரசு பணியமர்த்திட  வேண்டும். ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்தை வழங்க வேண்டும்.” என்றும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்